Homeசெய்திகள்இந்தியா'நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்'- 128 பேர் உயிரிழப்பு!

‘நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்’- 128 பேர் உயிரிழப்பு!

-

 

'நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்'- 128 பேர் உயிரிழப்பு!
Photo: ANI

நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.

மம்மூட்டி, ஜோதிகாவின் காதல் தி கோர் நவம்பர் 23-ம் தேதி ரிலீஸ்

நேபாளம் நாட்டின் ஜாஜர்கோட் மாவட்டத்தை மையமாகக் கொண்டு இரவு 11.32 மணிக்கு பதிவான நிலநடுக்கம் 15 வினாடிகளுக்கு மேல் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவுக்கோலில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் தலைநகர் காத்மாண்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உணரப்பட்டது.

வீட்டில் உள்ள பொருட்கள் குலுங்கியதைக் கண்டு, வீட்டில் இருந்து அலறியடித்தப்படி ஓடி வந்து, சாலையில் தஞ்சமடைந்தனர். இதனால் பல இடங்களில் வீடுகள் உள்ளிட்டக் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தனர். ஜாஜர்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி, 128 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் காணாமல் போகியிருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பல இடங்களில் தொலைத்தொடர்புச் சேவைகள் முடங்கியுள்ளன.

இந்தியன் 2 திரைப்பட அறிமுக வீடியோ வெளியானது

இதற்கிடையே, இந்த நிலநடுக்கத்தின் நில அதிர்வுகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டது.

MUST READ