Homeசெய்திகள்இந்தியாவெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!

வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!

-

 

வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!
Video Crop Image

நாடு முழுவதும் வெங்காயம் விலை உயரத் தொடங்கியிருப்பதால் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் நடவடிக்கையாக இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை அதிகளவில் சந்தையில் விடுவிக்க மத்திய அரசு முடிவுச் செய்துள்ளது.

தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு…வெள்ளி விலையில் மாற்றமில்லை!

வெங்காயம் விலை நாடு முழுவதும் சராசரியாக ஒரு கிலோ 47 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சில்லறை விற்பனைச் சந்தையில் ஒரு கிலோ 25 ரூபாய் என்ற மானிய விலையில், கூடுதல் வெங்காயத்தை விடுவிக்க மத்திய நுகர்வோர் மற்றும் விவகாரத்துறை முடிவுச் செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே சந்தையில் கூடுதலாக வெங்காயம் விடுவிக்கப்படுவதாகக் கூறியுள்ள அந்த துறையின் செயலாளர் ரோஹித் குமார் சிங் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, தற்போது கூடுதலாக வெங்காயத்தைச் சந்தையில் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறினார்.

“வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை”- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

கடந்த ஆகஸ்ட் முதல் தற்போது வரை 22 மாநிலங்களின் பல்வேறு சந்தைகளுக்கு 1.75 லட்சம் டன் வெங்காயத்தை மத்திய அரசு விடுவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். காரி பருவ வெங்காயம் அறுவடை நடைபெற்று, தற்போது சந்தைகளுக்கு வரத் தொடங்கியிருப்பதாகவும், வெங்காயம் இருப்பு வைக்கும் அளவை, இரு மடங்காக அதிகரித்திருப்பதால், விலை உயர்வுக் கட்டுப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் பருவமழை குறைவாகப் பெய்ததால், வெங்காயம் சாகுபடி குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

MUST READ