spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

-

- Advertisement -

மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

we-r-hiring

மகாராஷ்டிரா மாநிலத்தில் 17 ஆயிரத்து 840 கோடி செலவில் இந்தியாவின் மிக நீளமாக கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி இந்த கடல் பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். 17 ஆயிரத்து 840 கோடி செலவில் 22 கிலோ மீட்ட நீளத்திற்கு கட்டப்பட்டு வந்த இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி – நவ சேவா அடல் பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றார்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.  மும்பையையும்,  நவி மும்பையையும் இணைக்கும் மிக நீளமான அடல் சேது பாலம் கடலுக்குள் 22 கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி இந்த பாலத்தில் பயணம் செய்யவுள்ளார்.

MUST READ