Homeசெய்திகள்இந்தியாநாட்டிற்கு வலுவான, சுதந்திரமான நீதித்துறை தேவை- மோடி

நாட்டிற்கு வலுவான, சுதந்திரமான நீதித்துறை தேவை- மோடி

-

நாட்டிற்கு வலுவான, சுதந்திரமான நீதித்துறை தேவை- மோடி

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வழங்குவது பாராட்டுக்குரியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

PM Modi inaugurates International Lawyers' Conference 2023 in New Delhi |  Hindustan Times

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டிற்கு வலுவான, சுதந்திரமான நீதித்துறை தேவை. உலகளாவிய அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், உலகளாவிய கட்டமைப்பு தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாட்டின் சட்ட கட்டமைப்புகள் மற்றொன்றுடன் இணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. இந்திய நீதித்துறை எப்போதும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்கிறது. 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற நடுநிலையான, வலிமையான, சுதந்திரமான நீதித்துறை தேவை. சுதந்திர போராட்டத்தில் சட்டத்துறை பெரும் பங்கு வகித்தது. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வழங்குவது பாராட்டுக்குரியது. இது சாமானிய மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

ஆபத்துகள் உலகளாவியதாக இருக்கும்போது, ​​அவற்றைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளும் உலகளாவியதாக இருக்க வேண்டும். மனிதகுலத்தின் நலனுக்காக இந்தியா வலுவாக நிற்கிறது” என்றார்.

MUST READ