ஒரிசா மாநிலத்தில் பூரி ஜெகநாதர் கோயிலின் நான்கு கதவுகளும் ஜூன் 13 வியாழக்கிழமை பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில
முதல்வர் மோகன் சரண் மஞ்சி தெரிவித்துள்ளார்.
ஒரிசா மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்த போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூட்டி கிடக்கும் பூரி ஜெகநாதர் கோயில் திறக்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்தது. அந்த வகையில் நேற்று பாஜக புதிய அரசு பதவி ஏற்றுக் கொண்டது. அதனை தொடர்ந்து கோயில் 4 வாயில் கதவுகளும் பக்தர்களுக்காக இன்று திறக்கப்பட்டது.
கோயிலுக்குள் முதலமைச்சர் மோகன் சரண் மஞ்சு, அவரது அமைச்சர்கள், பூரி தொகுதி எம்பி சம்பித் பத்ரா மற்றும் சில தலைவர்களும் கோயிலுக்குள் சென்றனர்.
ஒடிசாவில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி அரசு, புதன் கிழமையன்று நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பக்தர்களுக்காக மூடப்பட்டிருந்த பூரி ஜெகநாதர் கோவிலின் அனைத்து வாயில்களையும் மீண்டும் திறக்கும் திட்டத்திற்கு மோகன் சரண் மஜி ஒப்புதல் அளித்தார். அதன்படி இன்று திறக்கப்பட்டது.
12ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட கோயிலின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்காக ₹500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது குறித்து முதல்வர் செய்தியாளர்களிடம் பேசும்போது தேர்தலின் போது, 4 வாயில்களையும் மீண்டும் திறப்போம் என்று கூறியிருந்தோம். அதன்படி நான்கு வாயில்களின் கோவில் நடை இன்று திறக்கப்பட்டதாக தெரிவித்தார்.