Homeசெய்திகள்இந்தியாமக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்

-

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவைச் செயலாளர் உத்பல் குமார் சிங் அறிவித்துள்ளார்.

Rahul Gandhi - ராகுல் காந்தி

அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து வயநாடு தொகுதி எம்பி பதவி ராகுல்காந்தியிடமிருந்து பறிக்கப்பட்டது. எத்தனை சதி செய்தாலும் ராகுல்காந்தி போராட்டத்தை தொடர்வார்; தொடர்ந்து சண்டை செய்வோம் என காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து கனிமொழி எம்பி, ‘ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலைக்கு இணையானது’ எனக் கூறியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸின் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறையென தீர்ப்பு வந்ததும், அவரை எம்பி பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த 8 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

MUST READ