

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்திற்கு’ அசாம் மாநில காவல்துறை தடை விதித்துள்ளது. அசாம் மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தி நகரில் ராகுல்காந்தி நடைப்பயணம் நடத்த அசாம் மாநில காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இலங்கைப் படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ராகுல்காந்தி கண் முன்னே காங்கிரஸ் தொண்டர்கள் மீது அசாம் காவல்துறை தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள், காவல்துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் லேசான தடியடி நடத்தியதாக அசாம் மாநில காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
ராகுல்காந்தியின் நடைப்பயணத்தை காவல்துறையினர் தடுத்ததால் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கவுகாத்தி நகருக்குள் ராகுல்காந்தி நுழைவதைத் தடுக்க காவல்துறையினர் வைத்த தடுப்புகளை காங்கிரஸ் கட்சியினர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி எம்.பி., “அசாமில் பல்கலைக்கழக மாணவர்களிடம் பேச எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நான் மாணவர்களைச் சந்திப்பதை அசாம் முதலமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் தடுக்கின்றனர். நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகங்களிலும் இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது.
வேங்கைவயல் சம்பவத்தில் தமிழக அரசு நீதி வழங்க தவறிவிட்டது – ராமதாஸ் குற்றச்சாட்டு
தாங்கள் கேட்க விரும்புவதைக் கேட்பதற்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அசாம் முதலமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் விதிகளை உடைத்துள்ளனர்”. இவ்வாறு ராகுல்காந்தி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.


