Homeசெய்திகள்இந்தியாபாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் மீண்டும் பொறுப்பேற்பு!

பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் மீண்டும் பொறுப்பேற்பு!

-

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான் மற்றும் நிர்மலா சீதாராமன் , ஜெய்சங்கர் , பியூஷ் கோயல் மற்றும் தர்மேந்திர பிரதான், குமாரசாமி மற்றும் ஜிதன் ராம் மாஞ்சி , கிரி ராஜ் சிங், அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட 72 பேர் பதவியேற்றுள்ளனர். இதில் மீண்டும் அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பதவியும் இதேபோல் ராஜ்நாத் சிங்க்கும் தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியும், நிர்மலா சீதாராமனுக்கு தொடர்ந்து நிதித்துறை அமைச்சர் பதவியும், ஜெய் சங்கருக்கு தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். இரண்டாவது அமைச்சரவையில் உள்துறை அமித் ஷாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், ராஜ்நாத் சிங் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதேபோல் மோடியின் மூன்றாவது அமைச்சரவையிலும் ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு துறை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

MUST READ