spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாரெஸ்டோபாரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை சி பி ஐ க்கு மாற்ற வேண்டும்...

ரெஸ்டோபாரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை சி பி ஐ க்கு மாற்ற வேண்டும் – நாராயணசாமி வலியுறுத்தல்

-

- Advertisement -

ரெஸ்டோபாரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்துள்ளாா்.புதுச்சேரியில் கல்வி துறை கேட்பாரற்று உள்ளது. கல்வித்துறை அமைச்சர் இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். பாஜக மேலிட பொறுப்பாளர் சுரானா புதுச்சேரியில் அதிமுகவுடன் கூட்டணி பேசவில்லை என கூறியுள்ளார். அதிமுக என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியில் உள்ளனரா? இல்லையா? என்ற நிலையுள்ளது. 13 ரெஸ்டோபார்களை மூடுவதாக கண்துடைப்புக்காக கூறினர். மறுநாளே ரெஸ்டோபார் திறக்கப்பட்டது. ரெஸ்டோபாரை மூட கோரியும், ரெஸ்டோபாரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தயுள்ளோம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளாா்.

கட்டிட அனுமதி சிக்கல்கள் தீர்வு… அமைச்சர் முத்துசாமி

MUST READ