spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅதானி குழுமத்திற்கு எஸ்.பி.ஐ. ரூ.21,375 கோடி கடன்

அதானி குழுமத்திற்கு எஸ்.பி.ஐ. ரூ.21,375 கோடி கடன்

-

- Advertisement -

அதானி குழும நிறுவனங்கள் மொத்தம் வாங்கியுள்ள 2 லட்சம் கோடி கடனில் பல்வேறு வங்கிகளில் வழங்கிய கடன் மட்டும் 80 ஆயிரம் கோடி என்று தெரியவந்திருக்கிறது.

we-r-hiring

அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடன் மற்றும் பத்திரங்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் உத்தரவை அடுத்து ஒவ்வொரு வங்கியும் அதானி குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.

அதானி குழும நிறுவனங்களில் மொத்த கடன் தொகையான 2 லட்சம் கோடியில் எஸ்.பி.ஐ. அளித்த கடன் மட்டும் 21,375 கோடியாக உள்ளது. இண்டஸ்இண்ட் வங்கி 14,500 கோடியை அதானி குழுமத்திற்கு கடனாக அளித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி அதானி குழுமத்திற்கு 7,000 கோடி ரூபாயை கடனாக வழங்கி உள்ளது.அதானி குழும நிறுவனங்கள் மொத்தம் வாங்கியுள்ள 2 லட்சம் கோடி கடனில் பல்வேறு வங்கியில் வழங்கிய கடன் மட்டுமே 80,000 கோடியாக உள்ளது.

அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடன் மற்றும் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் உத்தரவை அடுத்து ஒவ்வொரு வங்கியும் அதானி குழும நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் விவரங்களை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய பங்குகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதானி குழுமம் ஹிண்டன்பெர்க் அறிக்கை ஏற்படுத்திய தாக்கத்தைக் கடந்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுவிட்டதாக பேசப்பட்டது.

இதற்கிடையே அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், FPO முறையில் முதலீட்டாளர்களுக்கு விற்பதாக இருந்த பங்குகளை திரும்பப் பெறுவதாகவும், வசூலித்த பணம் முதலீட்டாளர்களுக்கே திருப்பி கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துவிட்டது.

Home

இந்த முடிவு இந்திய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதானி குழும பங்குகளின் விலை சரியும் இந்த நேரத்தில் FPO முதலீடுகளை முன்னெடுத்துச் செல்வது சரியாக இருக்காது என்பதால் முதலீட்டாளர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுத்திருப்பதாக விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.

MUST READ