ரயிலில் பயணம் செய்த ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணி பரோட்டா பார்சலை அப்படியே மூடி வைத்துவிட்டார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு வந்தே பாரத் ரயில் விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25ம் தேதி இந்த ரயிலை திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரயில்யில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கல்வீசினர். இதனால் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இந்தநிலையில் நேற்று இந்த ரயிலின் இ-1 பெட்டியில் பயணம் செய்த பயணிகளுக்கு பரோட்டா வழங்கப்பட்டது.
அதில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புளு இருந்ததை பார்த்த அதிர்ச்சி அடைந்த அந்த பயணி பரோட்டா பார்சலை அப்படியே மூடி வைத்துவிட்டார். பின்னர் அவர் காசர்கோடு சென்றடைந்ததும், இதுபற்றி ரயில் நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
மேலும், இந்த புகார் குறித்து பாலக்காடு ரயில்வே கோட்டத்திற்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதற்கிடையே ரயிலில் வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்ததை ரயிலில் பயணம் செய்த சில பயணிகள் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
அந்த வீடியோவில் பரோட்டா பார்சலை ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் கையில் வைத்திருப்பதும், பரோட்டாவில் புளு இருப்பதும் தெரிகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.