
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்பப் பெற்றுள்ளார். கட்சித் தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் தனது முடிவைத் திரும்பப் பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

மதிமுகவின் சொத்துப்பட்டியல் வெளியிட மாட்டேன் – வைகோ
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இது கட்சித் தொண்டர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சரத் பவார் தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தேசிய கட்சிகள் அனைத்தும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரக்கூடிய நிலையில், மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் மூத்த தலைவர் என்பதால் பதவி விலகும் முடிவை சரத் பவார் கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
கோவில் திருவிழாவில் சலங்கை ஆட்டம் ஆடிய அதிமுக எம்.எல்.ஏ
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் மும்பையில் நேற்று (மே 05) நடைபெற்றது. அதில் கட்சியின் தலைவராக சரத் பவாரே நீடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையேற்று, தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவதாக சரத் பவார் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.