தெலுங்கானாவில் பள்ளி பேருந்து மீது கார் மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹன்மகொண்டா-கமலாபூர் மண்டலத்தில் உள்ள பிரதான சாலையில் சாலையைக் கடக்கும் போது, ஏகசிலா பள்ளிப் பேருந்து மீது கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
ஏகஷிலா பள்ளிக்குச் சொந்தமான பள்ளிப் பேருந்து பிரதான சாலையில் யு-டர்ன் எடுத்துச் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று பயணிகளுடன் வேகமாக வந்த கார் ஒன்று பேருந்து மீது மோதியதில் பேருந்து கவிழ்ந்தது. விபத்து நடந்த போது பேருந்தில் 30 மாணவர்கள் இருந்தனர். பேருந்தில் இருந்து மாணவர்களையும், காரில் இருந்த மூன்று பயணிகளையும் அந்த வழியாக சென்றவர் வெளியே இழுத்தார்.
போலீஸ் காவலில் மேக்கப் போட்ட நடிகை (apcnewstamil.com)
பலத்த காயங்களுக்கு உள்ளான காரில் பயணம் செய்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏகஷிலா பள்ளி மாணவர்கள் மூவருக்கு மட்டும் சிறிய காயங்களுடன் எந்த ஒரு பெரிய பாதிப்பும் இன்றி தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.