மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு காணப்படும் நிலையில் மத்திய அரசு மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
ஜிகா வைரஸ் பரவிவரக்கூடிய நிலையில் மாநிலங்கள் கண்காணிப்புடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது. ஆப்ரிக்கா நாடுகளில் முதலில் கண்டறியப்பட்டு தொடர்ச்சியாக வெவ்வேறு நாடுகளில் பரவக்கூடிய நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள சில மாநிலங்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

எடிஸ் கொசுவால் ஜிக்கா வைரஸ் பரவும் நிலையில் மருத்துவமனைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.ஜிகா வைரஸ் பாதிப்புடன் ஒருவர் கண்டறியப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
ஜிகா வைரஸ் என்பது மனிதர்களிடமிருந்து மனிதருக்கு பரவக்கூடிய வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக இந்த வைரஸ் பரவல் என்பது அவர்களுக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்படுத்தும் மற்றும் உயிரிழப்பு ஏற்பட கூடிய அச்சமும் உள்ளது.
கருவுற்ற பெண்கள் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தால் தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.