காங்கிரஸ்க்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி முன்னிலையில் இருந்து வந்த நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 தொகுதிகளுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருப்பதால், அந்த கட்சியினர் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட இடங்களில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை ராஜினாமா
இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தாராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.