spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதெலுங்கு நடிகர் தாரக்க ரத்னாவிற்கு திடீர் மாரடைப்பு - தீவிர சிகிச்சை

தெலுங்கு நடிகர் தாரக்க ரத்னாவிற்கு திடீர் மாரடைப்பு – தீவிர சிகிச்சை

-

- Advertisement -

ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் தெலுங்கு தேச கட்சியின் தேசிய தலைவர் நாரா லோகேஷ் பாதயாத்திரையை தொடங்கிய நிலையில் இதில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் பேரனும் நடிகருமான தாரக்க ரத்னாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பெங்களூருக்கு சிறப்பு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார்.

ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுகு தேச கட்சியை ஆட்சிக்கு கொண்டு வரும் விதமாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் தெலுங்கு தேச கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவருமான நாரா லோகேஷ் இன்று தனது தந்தையின் சொந்த தொகுதியான குப்பத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். இதில் தெலுங்கு தேச கட்சியின் முக்கிய தலைவர்கள் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். அவ்வாறு முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் பேரனும் நடிகருமான தாரக்க ரத்னாவும் மாமாவான சந்திரபாபுவை ஆட்சிக்கு கொண்டு வரும் விதமாக லோகேஷ் பாத யாத்திரை தொடக்கவிழாவில் பங்கேற்றார்.

லோகேஷுடன் தாராக்க ரத்னா நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென கூட்டத்தில் ​​தாரக ரத்னத்தின் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு உடனடியாக மாரடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு ஆஞ்சியோகிராம் ஸ்டென்ட் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து நடிகர் பாலகிருஷ்ணா செய்தியாளரிடம் கூறுகையில் என் தாரக ரத்னா உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மருத்துவர்கள் அறிவுரையின்படி அவரை மேம்படுத்தப்பட்ட ஐ சி யு பிரிவில் கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளதால் அவரை பெங்களூருக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விமானத்தில் கொண்டு செல்வதா அல்லது ஆம்புலன்ஸில் கொண்டு செல்வதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதனால் லோகேஷ் பாதயாத்திரையால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் தாரகரத்னா தற்போது குப்பம் மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ள நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நான்கு நாட்களாக ஓய்வின்றி நாரா லோகேஷுடன் ஒன்றாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து நாரா லோகேஷ் தொடர்ந்து தனது பாதையாத்திரை மேற்கொண்டு வந்தார்.

MUST READ