Homeசெய்திகள்இந்தியா“எதிர்காலமே நசுக்கப்படுகிறது!” - டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு மலையாள நடிகர் டோவினோ தாமஸ் பகிரங்க ஆதரவு!

“எதிர்காலமே நசுக்கப்படுகிறது!” – டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு மலையாள நடிகர் டோவினோ தாமஸ் பகிரங்க ஆதரவு!

-

- Advertisement -

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு மலையாளத் திரையுலகின் பிரபல நடிகர் டோவினோ தாமஸ் தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளார்.“எதிர்காலமே நசுக்கப்படுகிறது!” - டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு மலையாள நடிகர் டோவினோ தாமஸ் பகிரங்க ஆதரவு!டெல்லி போராட்டமும் அடக்குமுறையும்
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர் உயிரிழப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டத்தின் போது காவல்துறையினர் லத்திசார்ஜ் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி அடக்குமுறையைக் கையாண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

நடிகர் டோவினோ தாமஸ் உருக்கம்
இந்நிலையில், டெல்லியில் வீதியில் இறங்கிப் போராடி வரும் இளைஞர்களின் குரலுக்கு ஆதரவாக பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “ஒரு தேசத்தின் வருங்காலத் தலைமுறை குரல் கொடுக்கும்போது, அவர்களின் குரல்கள் அடக்குமுறைச் சக்தியால் நசுக்கப்படும்போது, அந்த எதிர்காலமே நசுக்கப்படுகிறது. நம் நாட்டில் நியாயமான காரணத்திற்காக அமைதியான முறையில் போராடும் ஒவ்வொருவருக்கும் எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என டோவினோ தாமஸ் (மலையாள நடிகர்) தெரிவித்துள்ளாா்.

we-r-hiring

வலுப்பெறும் கலை உலக ஆதரவு
ஏற்கனவே இப்போராட்டத்திற்குப் பல்வேறு சமூக ஆர்வலர்களும் திரை உலகத்தினரும் குரல் கொடுத்து வரும் நிலையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் நேரடியாகத் தனது ஆதரவைப் பதிவு செய்திருப்பது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“முதலமைச்சர் விஜய் குரல் கொடுக்கணும்!”… சட்டப்பேரவை முன் இறங்கி அடித்த ‘தெருக்குரல்’ அறிவு குண்டுக்கட்டாகக் கைது!

MUST READ