Homeசெய்திகள்இந்தியாபலமுறை கேட்டும் தராததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் தற்கொலை

பலமுறை கேட்டும் தராததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் தற்கொலை

-

பலமுறை கேட்டும் தராததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் தற்கொலை

தெலங்கானாவில் கொடுத்த கடனை பலமுறை கேட்டும் கொடுக்காததால் கடன் கொடுத்தவர் குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Fire

தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் கோதாவரிக்கனி நகரில் உள்ள கல்யாண் நகரை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த கைலாசா என்பவருக்கு ரூ.6.5 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது கடன் கொடுத்த ஸ்ரீனிவாஸ் நிதி நெருக்கடியில் உள்ளார். இதனால் தான் கொடுத்த கடனை திருப்பி கொடுக்குமாறு கைலாசாவிடம் கேட்டு வந்தார். ஆனால் கைலாசா அதனை தராமல் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

இதனால் மனம் உடைந்த ஸ்ரீனிவாஸ் குடும்பத்துடன் இன்று கைலாசா வீட்டின் முன்பு சென்று தனது குடும்பத்தினர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். கொடுத்த பணத்தை வாங்க முடியாமல் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ