பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களும் அதிகாரிகளும் வரலாறு படைத்துள்ளீர்கள் உங்களை சந்திக்கவே ஆதம்பூர் வந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளாா்.ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான விமானப்படை வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து சல்யூட் செய்தார். பின்னர் உரையாற்றிய அவர், விமானப்படை வீரர்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். நமது ஏவுகணைகள் எதிரிகளின் தளங்களை அழித்துவிட்டன. எதிரிகள் எவ்வளவோ முயன்றும் நமது அரணை தகர்க்க முடியவில்லை என பெருமையோடு கூறியுள்ள அவர், பாகிஸ்தான் தளவாடங்கள் இந்தியாவுக்கு நிகரானவை அல்ல என்றும் இந்தியாவுடன் மோதினால் அழிவுதான் என்று மோடி எச்சரிக்கும் தோணியில் பேசியுள்ளாா். பாரத மாதா வாழ்க என்ற சொல்லின் வீரியத்தை உலகம் உணர்ந்து கொண்டுள்ளது என்றும், இந்த முழுக்கம் நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது. விமானப்படை வீரர்களின் தீரச் செயல்கள் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளது என பெருமிதத்தோடு கூறியுள்ளாா்.
- Advertisement -