spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇந்திக்கு உச்சநீதிமன்றமே எதிர்ப்பு !

இந்திக்கு உச்சநீதிமன்றமே எதிர்ப்பு !

-

- Advertisement -

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் மனுதாரருக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

 இந்திக்கு உச்சநீதிமன்றமே எதிர்ப்பு !

we-r-hiring

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை இந்தியில் நடத்த வேண்டும் என்று கிஷன் சந்து ஜெயின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த பொதுநல மனுவானது தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்திருக்கிறது.

அப்போது நீதிபதிகள், இந்தியில் மட்டும் ஏன் வழக்கு விசாரணையை நடத்த வேண்டும்?

உச்சநீதிமன்றம் பல்வேறு மாநிலங்களில் இருந்து தாக்கல் செய்யக்கூடிய வழக்குகளை விசாரிக்கிறது. அப்படியானால் அனைத்து மாநில மொழிகளிலும் வழக்கு விசாரணையை நடத்த முடியுமா? இது நடைமுறை சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை ஆங்கிலத்தில் நடைபெற வேண்டும் என்கிற அரசியல் சாசன பிரிவு 348(1)- யை எப்படி ரத்து செய்ய முடியும்? இது அரசியல் அமைப்பின் மூல பிரிவு என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்தால் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நவம்பர் 5 மற்றும் 23 ல் 2 மணி நேரம் UPI சேவை இயங்காது – HDFC வங்கி அறிவிப்பு

MUST READ