
நேற்று (ஜூன் 02) மாலை 03.20 மணிக்கு ஷாலிமார்- சென்னை கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று மாலை 06.30 மணிக்கு கோரமண்டல் விரைவு ரயில் பாலசோர் ரயில் நிலையம் வந்தது. அந்த ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்று பின்னர் புறப்பட்டது.

ஒடிஷா ரயில் விபத்து: அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
பாலசோர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் பனாபனா ரயில் நிலையத்தை மாலை 06.50 மணிக்கு கடந்தது. நேற்று இரவு 07.00 மணியளவில் Up Line தடத்தில் சென்ற கோரமண்டல் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. Down Line- ல் சென்ற பெங்களூரு- ஹவுரா அதிவிரைவு ரயில் கோரமண்டல் ரயில் மீது மோதியது.
கோரமண்டல் ரயிலின் என்ஜின், 4 பெட்டிகள் கவிழ்ந்தன; 14 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. கோரமண்டல் ரயில் மீது மோதிய ஹவுரா ரயிலின் இரண்டு பெட்டிகள் தடத்தில் இருந்து உருண்டு கவிழ்ந்தன. அத்துடன், மூன்றாவது வழித்தடத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீதும் பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று இரவு விடிய, விடிய நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில மற்றும் பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம்”- மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!
மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் சுமார் 280 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 900- க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம், பிரதமர் சார்பில் தனித்தனியே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.