Homeசெய்திகள்இந்தியாஇளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

-

- Advertisement -

 

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு மாணவ, மாணவிகள் இன்று (பிப்.10) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

“மெட்ரோ 2ஆம் கட்ட பணிக்கு ஒப்புதல் தேவை”- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை (National Testing Agency- ‘NTA’) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு மாணவ, மாணவிகள் இன்று (பிப்.10) முதல் வரும் மார்ச் 9- ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மார்ச் 9- ஆம் தேதியே தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாளாகும்.

மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி வீட்டில் ஆவணங்களைப் பறிமுதல் செய்த என்ஐஏ அதிகாரிகள்!

நாடு முழுவதும் வரும் மே 05- ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து, ஜூன் 14- ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். நீட் நுழைவுத் தேர்வுக்கு www.nta.ac.in, exams.nta.ac.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ