
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக, தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோர் இன்று (ஏப்ரல் 12) பரப்புரை மேற்கொள்கிறார்கள்.
பெங்களூரு அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி!
வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தை நோக்கி தேசிய தலைவர்களின் வருகை அதிகரித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார்.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 12) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் பரப்புரைக்காக, பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஓசூர் வரவிருக்கிறார். காலை 10.00 மணியளவில் ஓசூர் ராம்நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் கிருஷ்ணகிரி வேட்பாளர் நரசிம்மனுக்கு ஆதரவாக வாக்குச்சேகரிக்கிறார்.
அதைத் தொடர்ந்து, சிதம்பரம் மற்றும் தஞ்சையில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தீவிர பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார். நாளை (ஏப்ரல் 13) நீலகிரி தொகுதி வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்தும், கோவை வேட்பாளர் அண்ணாமலை மற்றும் பொள்ளாச்சி வேட்பாளரை ஆதரித்தும் நிர்மலா சீதாராமன் வாக்குச்சேகரிக்கிறார்.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இதேபோல், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவும் இன்று தமிழகம் வருகிறார். மாலை 05.30 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் முதல் வாகனப் பேரணியாகச் சென்று பா.ஜ.க. வேட்பாளர் ராமஸ்ரீநிவாசனுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.