UPI பணம் பரிவர்த்தனை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இன்றைய டிஜிட்டல் உலகில் யுபிஐ பரிவர்த்தனை சர்வ சாதாரணமாகிவிட்டது. பெட்டிக் கடைகள் தொடங்கி சூப்பர் மார்க்கெட்டுகள் வரை தற்போது UPI பரிவர்த்தனை தான் நடந்து வருகிறது. இப்படி நாளுக்கு நாள் UPI பயன்பாடும், பரிவர்த்தனைகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அதன் அடிப்படையில் இந்தியாவில் UPI பணப் பரிவர்த்தனை ஆண்டுதோறும் 50% உயர்ந்து வருவதாக நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தெரிவித்துள்ளது.
2023 இல் 11,768 கோடி முறை இருந்த UPI பரிவர்த்தனை, கடந்த ஏப்ரலில் ஒரே மாதத்தில் மட்டும் 1,330 கோடி முறையாக உயர்ந்துள்ளது.
UPI பரிவர்த்தனையில் GPay, Phonepe, Paytm செயலிகள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அந்த செயலிகள் மூலம் 96% பரிவர்த்தனை நடைபெற்ற வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் டிஜிட்டல் இந்தியாவில் நாளுக்கு நாள் UPI போன்ற டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில் மறுப்பக்கம் அதன் மோசடிகளும் அதிகரித்து வருகிறது.