spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவணிக வளாகத்தில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்....இந்திய இளம்பெண் உயிரிழப்பு!

வணிக வளாகத்தில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்….இந்திய இளம்பெண் உயிரிழப்பு!

-

- Advertisement -

 

வணிக வளாகத்தில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்....இந்திய இளம்பெண் உயிரிழப்பு!
File Photo

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தின் நீதிபதியாக பணியாற்றி வருபவர் டி.நர்ஸி ரெட்டி. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 27). இவர் ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். பின்னர் மேற்படிப்பிற்காக கடந்த 2020- ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்கு சென்ற ஐஸ்வர்யா, அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வந்துள்ளார்.

we-r-hiring

திருப்பதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று ஐஸ்வர்யா தனது ஆண் நண்பருடன் டெக்சாஸில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு புகுந்த மர்மநபர் ஒருவர் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதில், ஐஸ்வர்யா உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,

துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மநபரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த டெக்சாஸ் மாகாண காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஐஸ்வர்யா உயிரிழப்பு குறித்து இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து, ஐஸ்வர்யாவின் உடலை விரைந்து ஹைதராபாத் கொண்டு வருவதற்கு தெலங்கானா மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

செல்வராகவன், யோகிபாபு கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

கடந்த 2022- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது சகோதரரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஐஸ்வர்யா இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ