spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதிப் பெட்டிகள் மாதிரி வெளியீடு!

வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதிப் பெட்டிகள் மாதிரி வெளியீடு!

-

- Advertisement -

 

வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதிப் பெட்டிகள் மாதிரி வெளியீடு!
Photo: Union Minister

வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதிக் கொண்ட பெட்டிகளில் முழு மாதிரியை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆடவர் அணிக்கு தங்கம்!

மத்திய அமைச்சர் அஸ்வினி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில், வந்தே பாரத் ரயிலின் உள் கட்டமைப்பு படங்களை அவர் பதிவிட்டுள்ளார். குளிரூட்டப்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளில் முழு மாதிரி படங்களை வெளியிட்டதோடு, 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

குளிர் சாதனப் பெட்டியில் அழகிய வேலைப்பாடுகளுடன், ரயில் கூரையினுள் அழகான மின் விளக்குகள், மேல் படுக்கையில் ஏற ஏணி அமைப்பு மற்றும் அகலமான ஜன்னல் வசதியுடன், உலக தரத்தில் படுக்கை வசதிப் பெட்டிகள் வடிவமைப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டு- நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!

இதற்காக, தற்போது இருக்கும் வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் உள்புறத்தில் மட்டும் மாற்றப்பட வேண்டும் என்பதால், இந்த பணிகள் விரைவாக நிறைவுப் பெறும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

MUST READ