- Advertisement -
கேரளாவில் பாராகிளைடிங் சாகசத்தால் நேர்ந்த விபரீதம்
கேரளாவில் பாராகிளைடிங் சென்ற இரண்டு பேர் ராட்சத விளக்குத் தூணில் சிக்கிக்கொண்டு தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காற்றின் வேகத்தால் திசை மாறிச் சென்ற பாராகிளைடர்
திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வர்கலா கடற்கரையில், பாராகிளைடிங் சாகசம் செய்வது வழக்கத்தில் உள்ளது. கோவையைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவரும், சுற்றுலா வழிகாட்டியும் பாராகிளைடிங் சென்றுள்ளனர். காற்றின் வேகம் காரணமாக அவர்களால் மீண்டும் தரையிறங்க முடியாத சூழலில், வேறு திசைக்கு பறந்த பாராசூட், ஹை மாஸ்ட் விளக்குகளை தாங்கி நிற்கும் ராட்சத தூணில் சிக்கிக் கொண்டது. இருவரும் 50 அடி உயரத்தில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராட்சத விளக்குத்தூணில் சிக்கிய 2 பேர் பத்திரமாக மீட்பு
தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், அவர்களை குறைவான உயரத்திற்கு வரவழைத்து, விரித்து வைக்கப்பட்டிருந்த வலையில் குதிக்க வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
பத்திரமாக மீட்கப்பட்ட இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.