டெல்லி சட்டபேரவை சபாநாயகராக “விஜேந்திர குப்தா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அதிசி ஆகியோர் விஜேந்திர குப்தாவை பாரம்பரிய முறைப்படி சட்டமன்ற இருக்கையில் அமர வைத்தனர்!
டெல்லி சட்டபேரவைக்கு நடந்த தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்ற பாரதிய ஜனதா கட்சி 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஏற்கனவே பதவியேற்றுள்ள நிலையில், டெல்லி சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று தற்காலிக சபாநாயகர் அரவிந்தர் சிங் லவ்லி தலைமையில் கூடியது. இதில் டெல்லி சட்டப் பேரவையின் சபாநாயகர் தேர்வுக்கான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் சபாநாயகராக போட்டியிட்ட ரோகிணி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் விஜயேந்தர் குப்தா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி ஆளும் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் டெல்லி முதலமைச்சருமான ரேகா குப்தா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அதிசி இருவரும் சபாநாயகர் இருக்கையில் முறைப்படி விஜயேந்திர குப்தாவை அமர வைத்தனர்.