spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா'விவிபேட் வழக்கு'- உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

‘விவிபேட் வழக்கு’- உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

-

- Advertisement -

 

'மக்களவைத் தேர்தல் 2024'- கரூர் தொகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம்!

we-r-hiring

விவிபேட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

சிங்கிள் ஷாட்டில் அசத்திய விஷால்… ரத்னம் மேக்கிங் வீடியோ வைரல்…

வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்கக் கோரிய வழக்கில், மனுதாரர், தேர்தல் ஆணையம் தரப்பில் வாதம் வைக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

EVM, விவிபேட் தொழில்நுட்பம், வழிமுறைகள் குறித்து விரிவான விசாரணை, ஆலோசனை நடத்தினோம். EVM, விவிபேட் கருவியின் நம்பகத்தன்மையை பல்வேறு கட்டங்களில் உறுதி செய்தோம். EVM- ல் கட்சி சின்னத்துடன் பார்கோடு இணைப்பது குறித்து ஆராய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5% ஒப்புகைச் சீட்டு சரிப்பார்க்கும் முறை தொடர வேண்டும்.

EVM வாக்குகளை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் 100% சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. முடிவுகளை அறிவித்து 45 நாட்களுக்கு இயந்திரங்களை சீல் செய்து வைத்திருக்க வேண்டும். வாக்குப்பதிவில் குளறுபடி என சொல்லி யாராவது அதை சரிபார்க்க விரும்பினால் கட்டணம் செலுத்த வேண்டும்.

அஜித்தின் கிளாசிக் பில்லா… திரையரங்குகளில் ரீ ரிலீஸ்….

தேர்தல் முடிவுக்கு பின் இயந்திரத்தை சரிபார்க்க வேட்பாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரே வேளை இயந்திரத்தில் தவறு இருப்பதை கண்டறிந்தால் கட்டணம் திருப்பித் தரப்படும். தேர்தல் நடைமுறையைச் சந்தேகிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழி வகுக்கும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ