வரும் மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கம் மாநிலத்தில் தனித்துப் போட்டியிடப்போவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
ஏறுதழுவுதல் அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கம் மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தனித்துப் போட்டியிடும். மேற்குவங்கம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. எனினும், இந்தியா கூட்டணியில் தான் இருக்கிறோம்; மேற்குவங்கம் மாநிலத்தில் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நீதி பயணம் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
ராகுல்காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்கப் போவதில்லை; மதச்சார்பற்ற கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, மேற்குவங்கம் மாநிலத்தில் பா.ஜ.க.வை நேருக்கு நேர் சந்திக்கவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் அறிவிப்பு, இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும், மேற்குவங்க மாநிலத்தில் இந்தியா கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்திக்கும் எனக் கூறப்படுகிறது.
சி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு வழக்குகளை ரத்துச் செய்தது உயர்நீதிமன்றம்!
முன்னதாக, மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன் வந்ததாகவும், அதனை காங்கிரஸ் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது