Homeசெய்திகள்இந்தியாதேசிய தேர்வு முகமையில் மாற்றம் வருமா?

தேசிய தேர்வு முகமையில் மாற்றம் வருமா?

-

- Advertisement -

நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடு அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில் புகாரை விசாரிக்க உயர்மட்ட குழு ஒன்று திரட்டி அமைத்து இருக்கிறது. நீட் தேர்வுகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி உயர்மட்ட குழு பரிந்துரைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தேசிய தேர்வு முகமையில் மாற்றம் வருமா?தேசிய தேர்வு முகமை செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றியும் ஆய்வு செய்து 2 மாதங்களில் அலசி எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் காரணமாக நீட் தேர்வு முறைகேடு பற்றி விசாரிக்க உயர்மட்ட குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் அமைந்திருக்கிறது.

தேசிய தேர்வு முகமையில் மாற்றம் வருமா?இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி, டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் ரன்தீப் குலோரியா உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.ஒன்றிய அரசின் கல்வித் துறை இணைச் செயலாளர் கோவிந்த் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து உயர்மட்ட குழு பரிந்துரைக்கும். தேசிக தேர்வு முகமை செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி ஆய்வு செய்து 2மாதங்களில் அலசி எடுக்க இந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ