கர்நாடகாவில் சுமார் ஒரு கோடி மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும் கிரஹலட்சுமி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
விக்ட்ரி வெங்கடேஷ் உடன் கூட்டணி அமைக்கும் ஆர்யா!
கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடந்த அரசு விழாவில் கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்த திட்டத்திற்காக, 17,500 கோடி ரூபாயை கர்நாடக அரசு ஒதுக்கியுள்ளது. தேர்தல் வாக்குறுதிப் படி, சக்தி, கிரஹஜோதி, அன்னபாக்யா திட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், நான்காவதாக கிரஹலட்சுமி திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
புது மாப்பிள்ளை கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!
அப்போது பேசிய முதலமைச்சர் சித்தராமையா, “வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூபாய் 3,000, டிப்ளோ படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 1,500 வழங்கும் ஐந்தாவது வாக்குறுதியான யுவநிதி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்” என உறுதியளித்தார்.