- Advertisement -
900 விமானிகள் மற்றும் 4,200 விமான பணி பெண்களை வேலைக்கு சேர்க்கவுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய அரசிடம் இருந்து “ஏர் இந்தியா” நிறுவனத்தை டாடா நிறுவனம் கைப்பற்றிய பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை டாடா நிறுவனம் வருவாய் ரீதியில் ஏற்படுத்தி வருகிறது.


சமீபத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ‘ஏர்பஸ்’ நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ‘போயிங்’ நிறுவனத்திடம் இருந்து 470 பயணிகள் விமானத்தை வாங்குவதற்கு டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

இது இந்நிறுவனத்தை சர்வதேச அளவில் விரிவு படுத்துவதற்கான முக்கிய இலக்கு என டாடா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விமானங்களின் இயக்கத்தை அதிகரிக்க கூடுதலாக 900 புதிய விமானிகள் மற்றும் 4,200 விமான பணிப்பெண்களை பணியில் சேர்க்க உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.


