உடல் பருமன் பிரச்சனையால் இப்பொழுதெல்லாம் பலரும் அவதிப்படுகின்றனா். அதிலும் குறிப்பாக உடல் எடையை விட தொப்பை பலருக்கும் அதிகமாகவே காணப்படுகிறது. இதற்காக பலர் கடினமாக உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால் தொப்பை கரைவதே இல்லை. ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. இனி கவலை வேண்டாம், நீங்கள் ஒரு மாதத்திற்கு இந்த ஒரு பானம் குடிப்பதன் மூலம் உங்களின் தொப்பையை கரைக்கலாம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீா்களா? நம்புங்கள்… அது என்ன? எப்படி? என்பதை இங்கு காணலாம்.
அது என்ன?
அது தான் வெள்ளரிக்காய், வெள்ளரிக்காயில் அதிகமான நீர்ச்சத்து உள்ளதால், உடல் நீரேற்றத்துடன் இருக்க உதவுகிறது. இது சருமத்திற்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது. செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்கவும், செரிமான கோளாறுகளைத் தணிக்கவும் இது உதவுகிறது.

உடல் சூட்டைத் தணித்து, புத்துணர்ச்சியுடன் நாம் செயல்பட உதவுகிறது. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகளவில் இருப்பதால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பொிதும் துணைப்புரிகிறது. வெள்ளரிக்காயில் வைட்டமின் A மற்றும் C போன்ற வைட்டமின்களும், மாங்கனீசு போன்ற தாதுக்களும் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது. இது உடலில் ஆக்ஸிஜனேற்றத்தை வழங்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அது எப்படி?
வெள்ளரிக்காய் குறைந்த கலோரிகளையும், நீர்ச்சத்தையும் கொண்டுள்ளது. இதனால் எடை குறைப்புக்கு வெள்ளரிக்காய் பானம் பொிதும் உதவுகிறது. அத்தகைய பானத்தை எப்படி தயாாிக்கலாம் என்று பாா்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
அரை வெள்ளரிக்காய்,
அரை அங்குலம் இஞ்சி,
சிறிது புதினா இலைகள்,
ஒரு சிட்டிகை மஞ்சள்,
ஒரு டீஸ்பூன் சப்ஜா விதைகள்,
சிறிது கொத்தமல்லி,
இலவங்கப்பட்டை தூள்,
சாமந்தி விதை தூள்,
200 மில்லி தண்ணீர்
செய்முறை:-
சப்ஜா விதைகளைத் தவிர மற்ற அனைத்தையும் ஒரு பிளெண்டரில் போட்டு ஜூஸாக அரைக்கவும். இப்போது சப்ஜா விதைகளை ஒரு டம்ளரின் அடிப்பகுதியில் போட்டு, இந்த ஜூஸை அவற்றின் மேல் ஊற்றவும். அவ்வளவுதான், ஜூஸ் ரெடி.
காலையில் இந்த ஜூஸைக் குடித்தால் போதும். வெள்ளரிக்காய் நம் உடலின் நீர் தக்கவைப்பு திறனை நிறுத்துகிறது. இது எளிதில் எடை குறைக்க உதவுகிறது. மேலும் வயிற்றில் உள்ள கொழுப்பை மெதுவாக கரைக்கிறது. கொத்தமல்லி ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தது. வெள்ளரிக்காய் நம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன. இது தொப்பை கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. இந்த ஜூஸை குடிப்பதோடு மட்டுமல்லாமல், குறைந்தபட்ச உடற்பயிற்சியையும் தவறாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு முழுமையான பலன் கிடைக்கும்.
அளவில் சிறியது… நன்மைகள் பெரியது… வெந்தயம் சாப்பிடுவதால் தீரும் பிரச்சனைகள்!


