Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பாட்டி கால ஸ்வீட்..... ஒருமுறை செய்து பாருங்கள்!

பாட்டி கால ஸ்வீட்….. ஒருமுறை செய்து பாருங்கள்!

-

- Advertisement -

கர்ச்சிக்காய் செய்வது எப்படி?

கர்ச்சிக்காய் செய்ய தேவையான பொருட்கள்:

ஈர அரிசி மாவு – 200 கிராம்பாட்டி கால ஸ்வீட்..... ஒருமுறை செய்து பாருங்கள்!
வெல்லம் – ஒரு கப்
தேங்காய் – ஒரு கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
பொட்டுக்கடலை – ஒரு கப்
எண்ணெய் – 250 மில்லி

செய்முறை:

கர்ச்சிக்காய் செய்ய முதலில் தேங்காயை துருவி வைத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம் வெல்லத்தைப் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு அரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். இப்போது அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து அதனை கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பின் அதனை சிறு துண்டுகளாக தட்டிக் கொள்ள வேண்டும்.

தட்டிய உருண்டை களை சொப்பு போல் செய்து கொள்ள வேண்டும். பின்னர் முடித்து வைத்துள்ள பொட்டுக்கடலை, தேங்காய் துருவல் பொடியுடன் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கி மாவினுள் வைத்து மூடிவிட வேண்டும்.பாட்டி கால ஸ்வீட்..... ஒருமுறை செய்து பாருங்கள்!

இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சொப்பு போல் செய்து வைத்த மாவை சேர்த்து இருபுறமும் வெந்து வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது கர்ச்சிக்காய் ஸ்வீட் தயார். இது பாட்டி கால ஸ்வீட். நீங்களும் ஒரு முறை செய்து பாருங்கள்.

MUST READ