spot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்குப்புறப்படுத்து தூங்குபவா்களா நீங்கள்..? இனி அந்த தவறை செய்யாதீர்கள்.

குப்புறப்படுத்து தூங்குபவா்களா நீங்கள்..? இனி அந்த தவறை செய்யாதீர்கள்.

-

- Advertisement -

உங்களுக்கு குப்புறப்படுத்து தூங்கும் பழக்கம் உள்ளதா? இனி அந்த தவறை செய்யாதீா்கள். அதனால் கழுத்து வலி, முதுகு வலி போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.குப்புறபடுத்து தூங்குபவா்களா நீங்கள்..? இனி அந்த தவறை செய்யாதீா்கள். நீங்கள் குப்புறப் படுக்கும்போது, ​​உங்கள் தலையை ஒரு பக்கமாகத் திருப்ப வேண்டும். நீங்கள் அதை அப்படித் திருப்பும்போது, ​​சுவாசிப்பது உங்களுக்கு கடினமாகிவிடும். கழுத்தும் நீண்ட நேரம் வளைந்துவிடும். அப்படி வளைந்திருப்பது நரம்புகளில் ஒரு விதமான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கழுத்து தசைகளும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றன. இதனால் கூச்ச உணர்வு, உணர்வின்மை, தோள்கள் மற்றும் கைகளில் வலி போன்றவைகள் ஏற்படுகின்றன. தலை திருப்பி படுத்திருப்பதால், அது இயற்கைக்கு மாறானதாக மாறிவிடுகிறது. இது வலி மற்றும் நரம்பு பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

நீங்கள் குப்புறப்படுத்து தூங்குவதால், உங்கள் எலும்புகள், தசைகள் மற்றும் உங்கள் சுவாசத்தையும் பாதிக்கின்றன. ஏனெனில் இது உங்கள் மார்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. நீங்கள் சுவாசிக்கும்போது உங்கள் நுரையீரல் முழுமையாக விரிவடைவதைத் தடுக்கிறது. இது உங்கள் உடலுக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெறுவதைத் இவ்வாறு தூங்குவதன் மூலம் தடுக்கிறது. நீங்கள் இரவு முழுவதும் தூங்கினாலும், காலையில் எழுந்திருக்கும்போது சோர்வாக உணா்வீா்கள். இது ஆஸ்துமா, தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது.குப்புறபடுத்து தூங்குபவா்களா நீங்கள்..? இனி அந்த தவறை செய்யாதீா்கள். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் குப்புறப் படுக்கக்கூடாது. இது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. உடலில் இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. மேலும், குப்புறப்படுக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, முகத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் விரைவில் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். குழந்தைகளை ஒருபோதும் குப்புறப் படுக்க வைக்கக்கூடாது. அவ்வாறு செய்வதால், அது அவர்களின் உயிருக்கே மிகவும் ஆபத்தாகிவிடும்.

கருவளையத்தை நீக்கி அழகிய கண்களைப் பெற செய்ய வேண்டியவை!

we-r-hiring

MUST READ