வாழைப்பூவில் மறைந்திருக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
வாழைப்பூ சாப்பிடுவதால் பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. அந்த வகையில் வாழைப்பூ சாப்பிடுவதனால் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சிங்க், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகிய அனைத்தும் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் வாழைப்பூ என்பது வயிற்றுப்புண், ரத்த சோகை, ரத்த அழுத்தம், மூலம் ஆகியவற்றுக்கும் தீர்வாக பயன்படுகிறது. வாழைப்பூவில் உள்ள கிளைக்கோலிப்ட்கள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை தடுக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தாராளமாக வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்தது வாழைப்பூவில் கர்ப்பப்பையை காக்கும் திறன் உள்ளது. எனவே இளம் வயது பெண்கள் வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் மாதவிடாய் கோளாறு போன்ற கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகளை தடுக்கலாம்.
மேலும் வாழைப்பூவில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தீர்க்கும். வாழைப்பூவை பொறியலாகவோ அல்லது வடை போல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வர அல்சர், வாயு தொல்லை, சிறுநீரக கல்லடைப்பு ஆகியவற்றிலிருந்து விடுபடலாம். இவ்வாறு பலவிதமான நோய்களுக்கு தீர்வு தரும் வாழைப்பூ ஆயுளை பெருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகிய ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.