சீஸ் பன்னீர் ரோல் செய்வது எப்படி?
சீஸ் பன்னீர் ரோல் செய்ய தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 250 கிராம்
பன்னீர் – 100 கிராம்
சீஸ் – 4 ஸ்பூன்
வெண்ணெய் – 4 ஸ்பூன்
எண்ணெய் – 250 மில்லி கிராம்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
சீஸ் பன்னீர் ரோல் செய்ய முதலில் பன்னீரை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் துருவிய பன்னீரை, மைதா மாவு, சீஸ், வெண்ணெய், உப்பு ஆகியவைகளுடன் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அதனை சப்பாத்தி வடிவில் உருட்டி மேலே பரவலாக பன்னீர் துருவலை போட்டு லேசாக உருட்ட வேண்டும்.
அதன் பிறகு சிறிது சிறிதாக இதனை கட் செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் இந்த பன்னீர் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
சீஸ் பன்னீர் ரோல் தயார்.
இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதனால் கோதுமை மாவிலும் செய்யலாம். அது மட்டும் இல்லாமல் கேரட், பீன்ஸ், குடைமிளகாய், கோஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளையும் சேர்த்து சீஸ் பன்னீர் ரோல் செய்யலாம். மேலும் பன்னீர் மற்றும் சீஸ் ஆகியவற்றில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை சாப்பிடலாம்.