Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கடலை மாவு காராபூந்தி செய்வது எப்படி?

கடலை மாவு காராபூந்தி செய்வது எப்படி?

-

கடலை மாவு காராபூந்தி செய்ய தேவையான பொருட்கள்:கடலை மாவு காராபூந்தி செய்வது எப்படி?

கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 கப்
ஃபுட் கலர் ( சிகப்பு மற்றும் பச்சை) – தேவையான அளவு
வேர்க்கடலை – அரை கப்
முந்திரி – ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

காராபூந்தி செய்வதற்கு முதலில் கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் வேர்க்கடலை, முந்திரி ஆகியவற்றையும் வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடலை மாவு, அரிசி மாவு ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து மூன்று பாத்திரங்களில் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் உள்ள மாவில் சிகப்பு ஃபுட் கலரை சேர்த்து கலக்க வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் உள்ள மாவில் பச்சை ஃபுட் கலரை சேர்த்து கலக்க வேண்டும்.
மூன்றாவதாக உள்ள பாத்திரத்தில் இருக்கும் மாவில் எதுவும் கலக்கத் தேவையில்லை.

இப்போது ஒவ்வொரு பாத்திரத்தில் உள்ள மாவுகளையும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு கலர் மாவையும் எடுத்து பூந்தி கரண்டியில் பூந்திகளாக தேய்த்து பொரித்து எடுக்க வேண்டும்.கடலை மாவு காராபூந்தி செய்வது எப்படி?

பிறகு பூந்திகளை அகாலமான தட்டில் கொட்டி அத்துடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரி, கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்தூள் போன்றவற்றை சேர்த்து கலந்து பரிமாற வேண்டும்.

இப்போது காரசாரமான காரா பூந்தி தயார். மாலை நேரங்களில் டீக்கு சைடிஷாக இதை பயன்படுத்தலாம்.

MUST READ