Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அரிசி மாவு இருந்தா இந்த மாதிரி செஞ்சு பாருங்க.... சூப்பரான பிரேக்ஃபாஸ்ட்!

அரிசி மாவு இருந்தா இந்த மாதிரி செஞ்சு பாருங்க…. சூப்பரான பிரேக்ஃபாஸ்ட்!

-

- Advertisement -

அரிசி மாவு இருந்தா இந்த மாதிரி ஒரு சூப்பரான பிரேக்ஃபாஸ்ட் (அம்மணி கொழுக்கட்டை) செஞ்சு பாருங்க.அரிசி மாவு இருந்தா இந்த மாதிரி செஞ்சு பாருங்க.... சூப்பரான பிரேக்ஃபாஸ்ட்!

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு – 2 கப்
தண்ணீர் – 2 கப்
நெய் – 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு- ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
கறிவேப்பிலை- தேவையான அளவு
இட்லி பொடி – 3 ஸ்பூன்(காரத்திற்கேற்ப)

எண்ணெய் -தேவையான அளவுஅரிசி மாவு இருந்தா இந்த மாதிரி செஞ்சு பாருங்க.... சூப்பரான பிரேக்ஃபாஸ்ட்!செய்முறை:

இப்பொழுது முதலில் இரண்டு கப் அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் அளவு நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை சூடாக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் மிதமான தீயில் வைத்து அதில் அரிசி மாவை சேர்த்து கிளறி விடவும். பின்பு பத்து நிமிடங்கள் அதை அப்படியே மூடி வைத்து விட வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து அரிசி மாவை எடுத்து சப்பாத்தி போன்று நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அடுத்தபடியாக கையில் எண்ணெய் தடவி அரிசி மாவை உருண்டையாக உருட்டி கொள்ள வேண்டும். (குறிப்பு: விருப்பமான வடிவில் உருட்டிக் கொள்ளலாம்)

இப்போது தயார் செய்து வைத்திருக்கும் அரிசி மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து 7 முதல் 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். அதேசமயம் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.அரிசி மாவு இருந்தா இந்த மாதிரி செஞ்சு பாருங்க.... சூப்பரான பிரேக்ஃபாஸ்ட்! வெங்காயம் வதங்கியவுடன் வேக வைத்துள்ள அரிசி மாவு உருண்டையை கடாயில் கொட்டி 2 நிமிடங்கள் கிளறிவிட வேண்டும். கடைசியாக தேங்காய் துருவல், இட்லி பொடி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளறிவிட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது சூப்பரான பிரேக்ஃபாஸ்ட் ரெடி. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். மிகவும் மிருதுவாக இருக்கும். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

MUST READ