- Advertisement -
தஞ்சாவூரில் பிளஸ்2 தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி உள்பட 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாளக்குடி கிராமத்தைச் சேர்ந்த விஷாலி என்ற மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி விஷாலி முதல்நாள் தேர்வு எழுதிவிட்டு மாலை பிரதீப் என்ற உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நல்லிச்சேரி என்ற இடத்தில் சாலை வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி விபத்தில் பலியான சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.