spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்நானும் டெல்டாக்காரன்.. தஞ்சையில் விவசாயிகளின் மனம் குளிர வைத்த முதல்வர் ஸ்டாலின்

நானும் டெல்டாக்காரன்.. தஞ்சையில் விவசாயிகளின் மனம் குளிர வைத்த முதல்வர் ஸ்டாலின்

-

- Advertisement -

காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது கலைஞரின் தலைமையிலான தி.மு.க அரசுதான். தஞ்சையையும்-கலைஞரையும் பிரிக்கமுடியாது. அந்த வரிசையில்தான் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வோடு இன்றைக்கு இங்கு வந்து இருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

we-r-hiring

தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில், ரூ.325 கோடியே 96 லட்சம் செலவில் 2461 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.309 கோடியே 48 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் 4127 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் 2,25,383 பயனாளிகளுக்கு 558 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது கலைஞரின் தலைமையிலான தி.மு.க அரசுதான். தஞ்சையையும்-கலைஞரையும் பிரிக்கமுடியாது. அந்த வரிசையில்தான் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வோடு இன்றைக்கு இங்கு வந்து இருக்கிறேன்.

டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடி விவசாயிகளுக்காக கார்- குறுவை – சொர்ணவாரி பருவத்துக்கான சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 8 லட்சம் விவசாயிகளுக்கும் இந்த சிறப்புத் தொகுப்பு திட்டம் வழங்கப்படும்.

பூதலூர் வட்டத்தில் உயர் கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மற்றும் மதகுகள் ரூ.15 கோடி செலவில் புனரமைக்கப்படும். தென் பெரம்பூர் அருகே வெண்ணாறு மற்றும் வெட்டாறு பிரியும் இடத்தில் ரூ.42 கோடியில் புதிய பாலம் அமைக்கப்படும். ஈச்சங்கோட்டை முதல் வெட்டிக்காடு கல்லணை கால்வாய் சாலை ரூ.40 கோடி செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும் என்று விவசாயிகளை மகிழ்விக்கும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

MUST READ