
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி!
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழகம் வருவதையொட்டி, நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை பா.ஜ.க.வின் மாநில தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை மாநில தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.
அதன்படி, சேலம் மக்களவைத் தொகுதிக்கு பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான வானதி சீனிவாசன், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு முருகானந்தம், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு எஸ்.ஜி.சூர்யா, தென்காசி மக்களவைத் தொகுதிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாசி சுரங்கப்பாதை- இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணி!
பொறுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் உடனடியாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.