spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் - கே.பி.முனுசாமி

மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் – கே.பி.முனுசாமி

-

- Advertisement -

மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் – கே.பி.முனுசாமி

மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டியளித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, “அதிமுகவை பொறுத்தவரையில் எங்களுக்கு தேசிய நலன் முக்கியம். இந்திய நாட்டின் தேசிய நலன் கருதி மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வரவேண்டும் என அதிமுக முடிவு செய்துள்ளது. மோடி நாட்டின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பி கொண்டிருக்கிறார். மற்ற நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்வதற்கு தன்னை முழுமையாக ஈடுபத்திக் கொண்டிருக்கிறார். அதிமுக,பாஜக தனித்தனியாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுமா என எங்களுக்குள் இடைவெளியை யாரும் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டாம்.

we-r-hiring

தமிழகத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாரிசு அரசியலை உருவாக்கவில்லை. கருணாநிதி வாரிசு அரசியலை ஏற்படுத்தினார். அதன்பின் ஸ்டாலின் அவரது மகனை அமைச்சரவையில் அமர்த்திவிட்டு அந்தக் கட்சியின் தலைவர்களை எல்லாம் அடிமையாக வைத்துக் கொண்டிருக்கிறார். திமுகவில் அமைச்சர்கள், தலைவர்கள் அடிமையாக உள்ளனர். ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அடிமையாட்சி நடத்துகின்றனர்” என்றார்.

MUST READ