“தனித்து போட்டியிட அதிமுக தயங்காது”- ராஜன் செல்லப்பா
அதிமுகவில் ஒற்றைத் தலைமை உருவாகிவிட்டது என்பதற்காகவே மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற உள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள ராஜன் செல்லப்பா, “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரும் மதுரையில்தான் அதிமுக மாநாடுகளை நடத்தினர். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும். தேர்தலில் தனித்து போட்டியிடவும் அதிமுக தயங்காது. கூட்டணி தொடர்பான அண்ணாமலை கருத்து எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே பதில் அளித்துவிட்டார்.
கூட்டணிக்காக நாங்கள் யாரையும் அழைக்க மாட்டோம். அவர்களேதான் வர வேண்டும். அதிமுக கூட்டணியில் சேர வரும் கட்சிகளிடம் ஈபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்துவார்” என்றார்.