தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவே டெல்லி செல்கிறார்.அ வர் நாளை பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இருந்த நிலையில் அண்ணாமலையும் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அண்ணாமலையை பொருத்தவரை அவர் அதிமுக கூட்டணியை ஆரம்பத்தில் இருந்தே விரும்பவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கோ, அண்ணாமலை பாஜக தமிழக தலைவராக இருப்பது பிடிக்கவில்லை. இருவருக்கும் நிலவி வரும் பனிப்போர் தொடர்ந்து வருகிறது. இருப்பினும் பாஜக எடுக்கக்கூடிய முடிவுக்கு அண்ணாமலை கட்டுப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
அண்ணாமலைதான் தமிழக பாஜக தலைவராகத் தொடர்வார். ஆனால், உங்கள் கூட்டணி விவகாரங்களில் அவர் தலையிட மாட்டார். அவருக்கு பதிலாக உங்களுடன் தேர்தலில் பணியாற்ற தமிழக பாஜகவை சார்ந்த ஒரு உயர் அதிகாரக்குழுவை நியமிக்கிறோம் என அமித் ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, அமித் ஷாவிடம், எங்களது முக்கிய நிபந்தனைகளில் ஒன்று அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான். அவருக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் விருப்பமில்லை. அவர் இந்தக் கூட்டணி அமையக்கூடாது ன்பதற்காகவே அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்களை அருகில் வைத்துக் கொண்டு அதிமுகவை மறைமுகமாக விமர்சித்து வருகிறார். அவரை வைத்தெல்லாம் முடியாதுங்க” என வெளிப்படையாகவே கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு பிடி கொடுக்காமல் அனுப்பி வைத்துள்ளார் அமித் ஷா.
ஆகையால்தான், கூட்டணி குறித்து பேசியும், எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் தமிழக நலன்களுக்காக கோரிக்கை மட்டுமே வைப்பதற்காக சந்தித்தோம் எனக் கூறி வருகிறார். அண்ணாமலை பதவி நீக்கம் என்கிற ஒற்றைப் புள்ளியில் கூட்டணி முடியாமல் வந்து நிற்கிறது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அண்ணாமலையை நீக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதாலும் அதற்கு பாஜக தலைமை தெளிவான பதிலை கூறாமல் நழுவுவதாலும் வெளிப்படையாக எடப்பாடி பழனிச்சாமியால் பாஜக கூட்டணியை முழுமனதாக அறிவிக்க முடியவில்லை” என்று கூறப்படுகிறது.
இன்னொரு வகையில், அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசியதும் இதை உணர்த்தி உள்ளது. ”அரசியல் கணக்கு எதுவுமில்லை. எங்களுடைய நோக்கம் அது இல்லை. பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் சிறப்பாக வளர்ந்து கொண்டு வருகிறது. தேசிய ஜனநாயக கட்சிகளின் கூட்டணி முன்னேறி வருகிறது. எல்லோருடைய நோக்கமும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என எல்லோரும் விரும்புகிறார்கள். அதை ஒற்றைக் கோட்டில் கொண்டு செல்ல வேண்டும்.
நமது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லோரும் ஒரே மேடையில் இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து இணையலாம். யாரையும் வேண்டாம் என்று சொல்லப் போவதில்லை. அதிகாரப்பூர்வமாக உள்துறை அமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். யாரையும் உள்துறை அமைச்சர் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை.
இப்போது மேடையில் பார்த்திருப்பீர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எல்லா கட்சித் தலைவர்களும் மேடையில் இருந்தார்கள். வரமுடியாத தலைவர்கள் அவர்களது பிரதிநிதிகளை அனுப்பி இருக்கிறார்கள். இதே மேடையில் ரமலான் நோன்பு திறப்பு விழாவில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் அழைத்துக் காட்டி இருக்கிறோம்” எனப் பேசி இருந்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு டெல்லி செல்ல உள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றும் வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு டெல்லி செல்ல உள்ளார். டெல்லி செல்லும் அண்ணாமலை நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.