கட்சி தொண்டர்கள் ஒன்றுகூடி அதிமுகவை மீட்போம்- டிடிவி தினகரன்
தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் ஜீவிதா நாச்சியார் இல்லத்திற்கு வருகை தந்த கட்சியின் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய டிடிவி தினகரன், “ஒன்றிய அரசு விவசாயத்தையும், தமிழ்நாட்டு மக்களையும் பழிவாங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முயற்சி எடுத்து வருகிறது, அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க விடமாட்டோம். ரட்டை இலையும் , அதிமுகவும் எடப்பாடி கைக்கு சென்றால் நிச்சயம் அழிவு பாதையை உருவாக்கும். சினிமாவில் வீரப்பன், நம்பியார் போல் எடப்பாடி கைக்கு அதிமுக சென்றால் நிச்சயம் அதனை காப்பாற்ற முடியாது. நாங்கள் அனைவரும் கட்சி தொண்டர்களுடன் ஒன்று கூடி மீட்டெடுப்போம்”