Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலை கூட்டணி உடைகிறது! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க - அ.ம.மு.க. தனித்து போட்டி

அண்ணாமலை கூட்டணி உடைகிறது! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க – அ.ம.மு.க. தனித்து போட்டி

-

- Advertisement -
kadalkanni

மக்களவைத் தேர்தலுக்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமைத்த கூட்டணி உடைய போகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க – அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் தனித்து களம் காண முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

அண்ணாமலை கூட்டணி உடைகிறது! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க - அ.ம.மு.க. தனித்து போட்டி

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக பாஜக தலைமையில் பா.ம.க, அ.ம.மு.க உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கைப்பற்றியது. பாஜக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் டெப்பாசிட் இழந்தது.

இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலை கூட்டணி உடைகிறது! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க - அ.ம.மு.க. தனித்து போட்டி

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அமமுகவின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி, கிளை, கழக நிர்வாகிகள் வரை அனைவரையும் சந்தித்து ஊராட்சி செயலாளர், கிளைக் கழக செயலாளர், பூத் பிரதிநிதி என அனைவரையும் நேரில் சந்தித்து கள ஆய்வு நடத்திட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே பாஜக கூட்டணியில் உள்ள பாமக நேரடியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் களத்தில் இறங்குவதால் பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு விரைவில் பதவியேற்கிறார் (apcnewstamil.com)

ஏற்கனவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது காரணமாக கூட்டணி உடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

MUST READ