சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு பூங்காவின் பணிகளை நேரில் நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பூங்கா ஏரியில் தாமரை வளர்ந்திருப்பதை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டிய அமைச்சர் சேகர்பாபு, ஏரியில் கூட தாமரை வளரக்கூடாது என்று கிண்டலாக பேசினார்.

அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சை கேட்டு அதிகாரிகள் சிரித்தனர்.தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பாஜகவினர் பல ஆண்டுகளாக கூறிவரும் நிலையில்,அதனை கிண்டலடிக்கும் விதமாக சேகர்பாபு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி பரவிவந்தது.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக , தாமரை அரசமைக்கும் காலத்தை பார்க்கத்தான் போகிறீர்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்,
”அரசு அமைக்கும் பூங்காவில்.. குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது.. என ஆவேசப்பட்டு இருக்கிறார் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேகர் பாபு அவர்கள்… குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே… வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது.. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள்… அரசுஅமைக்கும் பூங்காவிலேயே தாமரை வேண்டாம் என் ஆவேசப்படும் நீங்கள்.. தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள்…. நீங்கள் காலம் காலமாக கூவத்தை சுத்தம் செய்வோம் என மக்களை ஏமாற்றுவது மாற்றி கூவத்தையும் சுத்தப்படுத்தி அங்கேயும் தாமரை மலர மலர் முகத்துடன் மக்கள் காணத்தான் போகிறார்கள்… இது வெறும் சத்தமல்ல சத்தியம் சாத்தியம்… இலட்சியப்ப பற்றுள்ள தொண்டர்களாலும் லட்சக்கணக்கில் சேர்ந்த புதிய உறுப்பினர்களாலும் இது சாத்தியம் என்பது சத்தியம்….”
துண்டு போட்டு காத்திருக்கும் அ.தி.மு.க …யாருமே சீண்டாத பா.ஜ.க – உதயநிதி விமர்சணம்