Homeசெய்திகள்அரசியல்பாஜக கூட்டணி கூட்டம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு, ஓபிஎஸ் புறக்கணிப்பு

பாஜக கூட்டணி கூட்டம் – ஈபிஎஸ்க்கு அழைப்பு, ஓபிஎஸ் புறக்கணிப்பு

-

பாஜக கூட்டணி கூட்டம் – ஈபிஎஸ்க்கு அழைப்பு, ஓபிஎஸ் புறக்கணிப்பு

பாரதிய ஜனதா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. கூட்டணி குறித்து மறுபரிசீலனை?- கூடுகிறது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்குகள் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த வழக்குகள் தொடர்பாக, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நேரில் வழங்கியிருந்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்திருந்தது தேர்தல் ஆணையம்.

Amit Shah eps ops
Amit Shah eps ops

இந்நிலையில் டெல்லியில் வரும் 18 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தற்போது வரை எனக்கு அழைப்பு வரவில்லை என்றும், பாஜக தலைவர்கள் எங்களுடன் பேசிக் கொண்டுதான் உள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

MUST READ